அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் நாளை (02-10-2022) நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பு - Kalviseithi net

Breaking

Saturday 1 October 2022

அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் நாளை (02-10-2022) நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பு

அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பு - All categories of head teachers are required to attend the Gram Sabha meeting to be held tomorrow (02-10-2022).

நாளை (02-10-2022) நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து வகை தலைமையாசிரியர்களும் பங்கு பெற வேண்டும் மேலும் இக்கூட்டத்தில்

🎖️ இந்த மாதத்திற்கான தீர்மானங்களை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள். நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அவற்றை விளக்கமாக பேச வேண்டும்

🎖️ *பள்ளி இடை நின்ற மாணவர்கள், பள்ளியில் சேராத மாணவர்கள், வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள், பள்ளி கட்டமைப்பு வசதிகள், இல்லம் தேடிக் கல்வி செயல்பாடுகள், பள்ளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்*

🎖️ பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் அவற்றினுடைய விவரத்தை புகைப்படத்துடன் வட்டாரத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இவை மாநில அளவில் தயாரிக்கப்படும் கையேட்டில் பிரசுரிக்கப்பட வாய்ப்புள்ளது

🎖️ கிராம சபா கூட்டங்களில் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகைப்படங்களை எடுத்து வட்டார வளமையத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

🎖️ *பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்த்தப்பட்ட பள்ளிகளில் 20 உறுப்பினர்களின் விவரங்களை Emis ல் Update செய்திருக்க வேண்டும் செய்யாமல் உள்ளவர்கள் உடனடியாக அவற்றை Update செய்யவும்

🎖️ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடைபெறும் நாளில் தவறாமல், மறவாமல் Emis parents app இல் வருகை பதிவேட்டை அன்றைய தினமே பதிவிட வேண்டும்* பதிவிடாத தலைமை ஆசிரியர்கள் அது சார்ந்து இனிவரும் காலங்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க நேரிடும்

🎖️ சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு நிகழ்வுகளை வீடியோ புகைப்படங்களாக அனுப்பவும் சிறப்பு தீர்மானங்கள் ஏதேனும் நிறைவேற்றி இருந்தால் அவற்றைச் சார்ந்த விவரத்தையும் நீங்கள் உடனுக்குடன் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது

- ராணிப்பேட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

-->