ஆக. . . அரசு ஊழியர் - பணியாளர் - ஆசிரியர் மாநாட்டால். . . .எந்தப் பயனுமில்ல! - Kalviseithi net

Breaking

Saturday 10 September 2022

ஆக. . . அரசு ஊழியர் - பணியாளர் - ஆசிரியர் மாநாட்டால். . . .எந்தப் பயனுமில்ல!

*ஆக. . . அரசு ஊழியர் - பணியாளர் - ஆசிரியர் மாநாட்டால். . . .*

*எந்தப் பயனுமில்ல!*


மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று கையெழுத்திட்டதாகக் கூறும் இரு கோப்புகளையும் முன்னரே முடித்துக் கொடுத்திருக்கலாம். . . . . மற்றபடி அவர் வழக்கம் போல சொன்னதையேதான் மீண்டும் சொல்லியுள்ளார்.

இதற்கு இவ்வளவு உடல் பொருள் ஆவியை வழங்கி & வாங்கி உறுப்பினர்கள் மத்தியில் தேவையற்ற நம்பிக்கையை விதைத்து மீண்டும் ஒருமுறை அவர்களை ஏமாற்றியிருக்க வேண்டாம். . .

*ஒருசில திமுக விசுவாசச் சங்கங்களின் வெற்று விளம்பரத்திற்காக* ஜாக்டோ-ஜியோ இரையாக்கப்பட்டுள்ளது.

எனது இக்கருத்திற்கு எதிராகப் பதில்கூற விரும்பும் எவரும் (திமுக விசுவாசச் சங்கத்தினரைத் தவிர்த்த எவரும்) தங்கள் மனசாட்சியை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். . . இப்போது முதல்வர் சொன்னவை எதுவும் இதற்கு முன் தங்களுக்குத் தெரியாதா?. . . .

இதுவும் போராட்ட வடிவமே என்று அண்டார்க்டிக்காவில் கம்பு சுத்துவோருக்கு எனது பதில் ஒன்றே. . . .

இனி தற்போதைக்கு கோரிக்கைகள் சார்ந்து 2024 வரை எந்தவொரு போராட்டமும் யாரும் நடத்திவிடாதபடி மொத்தமா கட்டையப் போட்டதற்கு வாழ்த்துகள்! கழுதைல வேற என்னத்தச் சொல்ல. . .

*Last but not least. . .* எப்பவும் ஏமாற்றத்தை மட்டுமே பார்த்துவரும் எனது அருமை ஆசிரிய & அரசு ஊழியர் சொந்தங்களே!. . .

இந்த ஏமாற்றத்தில் இருந்தாகிலும் நமது கோரிக்கைகள் சார்ந்து முதலில் தாங்கள் சார்த்திருக்கும் சங்கங்களில் எந்தளவு மிகை அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

மனம் தளர வேண்டாம்.

நாம் இன்று துய்க்கும் & நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றும் எடுத்த எடுப்பிலேயே யாருடைய தயவாலோ / கருணையாலோ கிட்டிவிடவில்லை. பல கட்ட வலுவான. . . .

*(Mark my words)* பல கட்ட வலுவான. . . . உறுதியான. . . . தொடர் போராட்டங்களால் மட்டுமே கிட்டியுள்ளது.

எனவே, வரலாறு கற்பித்துள்ள பாடங்களைக் கற்று அதற்கேற்ப தயாராக முன்வாருங்கள். நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நீண்ட நெடியதே!

யார் சொன்னாலும். . . I'm extremely sorry to say this எவன் எதைச் சொன்னாலும். . . . எதன்மீதும் வீண் நம்பிக்கை வைத்து ஏமாறாது, உங்களது போர்க்குணத்தின் மீது மட்டும் நம்பிக்கை வையுங்கள் என்ற வேண்டுகோளோடே,

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

No comments:

Post a Comment

-->