ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம் - Kalviseithi net

Breaking

Tuesday 27 September 2022

ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்

Are teachers covered under Labour law?
Who are covered in RA 4670?
Who are referred to as teacher in RA 4670?
What can teachers not do legally?
ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பான கடிதம் - Teachers' Union letter to Hon'ble Chief Minister to enact a job security law for teachers
தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு
பெறுநர்               
                                                                      மாண்புமிகு தமிழக முதல்வர்   அவர்கள்,  தலைமை செயலகம் , சென்னை-9
ஐயா,                    
  பொருள்:  தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் நலனுக்காக    பணிப்பாதுகாப்பு சட்டம்  கொண்டுவரக்கோருதல் - சார்பு.
         கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற சிறப்பு மட்டும்  போதாது. உயர்கல்வி மற்றும்  ஆராய்ச்சிக் கல்வியிலும் சிறந்த தமிழ்நாடு என்ற பெயர் வேண்டும்.            
                                                    - மாண்புமிகு தமிழக முதல்வர்.
   ஆசிரியர் பணி அறப்பணி என்ற கூற்றிற்கு இணங்க எதிர்காலத் தமிழகத்தை உருவாக்கிவரும் ஈடுஇணையற்ற பல்வேறு மன‌ அழுத்தங்களைப் பொருட்படுத்தாது தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆசிரியர்கள்.
                     ஆனால்      பள்ளிக்கு வெளியே சில மாணவர்கள்  ஒழுக்கம் தவறி நடக்கும் செயல்களான  பேருந்தில் தொங்குதல், குழுவாக அடித்துக் கொள்ளுதல் போன்ற செயல்களைக் குறிப்பிட்டு கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள்,  மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் ஒழுக்கம் தவறினாலும்  ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பதெல்லாம் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல ஆசிரியர் சமுதாயத்தைக் கேலிக்குரியதாக மாற்றி வருகின்றது. 
           மேலும் ஒரு சிலர் மாணவர்களைத் தூண்டிவிட்டு பொய்யாக அளிக்கும் புகார்கள் மீது POCSO சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இதனால் குடும்பத்துடன் மனவேதனை அடைவதுடன் சில ஆசிரியர்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும்  நடைப்பெற்று வருகின்றன. பிறகு அவர்கள் அப்படிப்பட்ட  பொய்ப் புகாரிலிருந்து வெளிவந்த பிறகும் தொடர்ந்து சந்திக்கும் இன்னல்கள் அவமானங்கள் ஏராளம்.
         பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் மீதான சமூக விரோதிகள், அரசியல்வாதிகளின் தாக்குதல்கள்  வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.   ஆசிரியர் பணிக்கு ஏன் வந்தோம் என பல ஆசிரியர்களும் விருப்ப ஓய்வு அளிக்கும் எண்ணத்துடன் பல ஆசிரியர்களும் மன வேதனையுடன் பணி செய்து வருகின்றனர். 
                இத்தகைய மனநிலையுடன் பணியாற்றும்  ஆசிரியர்களின் மனக்கவலையை தீர்க்கும் பொருட்டும் அவர்கள் அச்ச உணர்வின்றி, சிறப்புடன் கல்விப் பணியாற்றிடும் வகையிலும் எதிர்காலத் தமிழ்நாடு சிறந்த ஒழுக்கத்துடனும் அளவற்ற அறிவுடனும் விளங்கிட உதவும் வகையில் ஆசிரியர்களுக்கான *பணிப்பாதுகாப்பு சட்டத்தினை* உடனடியாக இயற்ற வேண்டும் என்ற தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு இன் நீண்டகாலக் கோரிக்கையினை, ஆசிரியர் நலனில் பெருமளவு அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நிறைவேற்ற  வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.                            
  என்றும் தேசிய கல்விப் பணியில்                  
மாநிலத் தலைவர்                                       பொதுச்செயலாளர்
நகல்:
1.மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், சென்னை-9
2. ஆணையர் அவர்கள், பள்ளிக்கல்வி ஆணையரகம்,சென்னை-6  

No comments:

Post a Comment

-->