தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி ஆசிரியர் கழகம் - 23.09.2022
பெறுநர்
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்
பள்ளிக்கல்வி ஆணையரகம்.
- 600 006.
மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு,
வணக்கம்.
எங்களது சங்கத்தின் கீழ்க்காணும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஆவன செய்யும்படி தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.
1. பள்ளிக்கல்வித்துறை உருவாக்கப்பட்ட நாள் முதல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியருக்கு உரிய பள்ளித்துணை ஆய்வாளர் பணியிடம் (DI) உருவாக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது கொண்டுவரப்பட்ட அரசாணை G.O.151-ன் படி 31 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக (Surrender) செய்திகள் வந்துள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலகங்களில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளித் துணை ஆய்வாளர் (DI Post) மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டதாரி ஆசிரியர்களுக்கே உரிய பள்ளித் துணை ஆய்வாளர் (DI) பணியிடங்களை வழங்கிட ஆவன செய்யும்படி கனிவுடன் வேண்டுகிறோம்.
2. அதேபோல், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் போன்ற அலுவலகங்களுக்கும் (DI) பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் உருவாக்கித் தர வேண்டுகிறோம்.
3. உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கே உரித்தான பதவி உயர்வுப் பணியாகும். எனவே, எக்காரணம் கொண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு அளிக்கக்கூடாது என வேண்டுகிறோம். மேலும் இது சம்மந்தமான நீதிமன்ற வழக்கை உடனடியாக முடிக்க ஆவன செய்யும்படி வேண்டுகிறோம்.
4. தற்போது முதுகலை ஆசிரியர்கள் (TRB) மூலமாக கிட்டத்தட்ட 3000 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர் என தெரியவருகிறது. எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு PG பதவி உயர்வு வழங்கிவிட்டு நேரடி நியமனம் செய்தால் எதுவாக இருக்கும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PG) பதவி உயர்வை வழங்கிட ஆவன செய்யும்படி வேண்டுகிறோம். மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட ஆவன செய்யும்படி கோருகின்றோம்.
5. ஆசியர் தகுதித் தேர்வு (TET) தமிழகத்தில் முதன் முதலாக 2012-ல் தான் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக அரசு நிதியுதவி பெறும் (Aided) பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (TET) ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுகிறோம். மேலும் இதே கால கட்டத்தில் அரசு பள்ளிகளிலும், சிறுபான்மை பள்ளிகளிலும் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம். எனவே அவ்வாசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுகிறோம்.
எனவே மேற்காணும் எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஆவன செய்யும்படி கனிவுடன் கோருகின்றோம்.

No comments:
Post a Comment