நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் - ஆணை - Kalviseithi net

Breaking

Saturday 17 September 2022

நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் - ஆணை

Subsidy of 50% of the cost of land or up to a maximum of Rs.5.00 lakhs for purchase of land to landless agricultural laborers - Ordinance

விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023-ஆம் ஆண்டிற்கனை மானிய கோரிக்கைபின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது

நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூ10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்க ரூ.10,00.00.000/- (ரூபாய் பத்து கோடி மட்டும்) மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அசாணை நிலை)எண்.79, ஆதி(ய)பற்(சிஉதி) நாள் 10.09.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

-->