Separation of Educational Districts - District Minister request to Minister of School Education - கல்வி மாவட்டம் பிரிப்பு - பள்ளிக்கல்வி அமைச்சருக்கு மாவட்ட அமைச்சர் கோரிக்கை - Kalviseithi net

Breaking

Tuesday 20 September 2022

Separation of Educational Districts - District Minister request to Minister of School Education - கல்வி மாவட்டம் பிரிப்பு - பள்ளிக்கல்வி அமைச்சருக்கு மாவட்ட அமைச்சர் கோரிக்கை

கல்வி மாவட்டம் பிரிப்பு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு மாவட்ட அமைச்சர் கோரிக்கை - Separation of Educational Districts - District Minister request to Minister of School Education

அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அலுவலகப் பணியாளர்கள் நலன் கருதி திருச்செந்தூர் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட கோரிக்கை

பெறுநர்

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம்.

சென்னை-9.



மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு வணக்கம்,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருச்செந்தூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாவட்ட கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு ஏராளமான அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. தற்போது மாவட்ட கல்வி அலுவலகம் நீக்கப்பட்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகமாக தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மாவட்டத்தை விட அதிகமான பள்ளிகளும் ஆசிரியர்களும் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள். எனவே, திருச்செந்தூர் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி திருச்செந்தூர் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

No comments:

Post a Comment

-->