பள்ளிக்கல்வி பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாகப் பிரித்து மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi net

Breaking

Wednesday 14 September 2022

பள்ளிக்கல்வி பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாகப் பிரித்து மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாகப் பிரித்து மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக.

பார்வையிற்காண் கடிதங்களின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் நூலகம் சார்ந்து மாணவர்களுக்கான செயல்பாடுகள் பெறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பள்ளி நூலகங்களில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் நூலகச் செயலியில் பள்ளிகள் பதிவேற்றம் செய்து வருகின்றன. இப்பணி முடிக்கப்படாமல் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் இச்செயலியில் முழுமையாகப் பதிவேற்றம் செய்யவும் மாணவர்களுக்கு செயலி வாயிலாகவே நூல்களை வழங்கவும் ஏதுவாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி நூலகத்திலிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளவை மற்றும் பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பவை என இரு வகைகளாகப் பிரிக்கவேண்டும். அவ்வாறு பிரித்தவற்றில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள புத்தகங்களை பள்ளி நூலகங்களில் உள்ள அலமாரிகளில் வகுப்பு வாரியாக அடுக்கி அவற்றை நூலகச் செயலியில் முறையாக பதிவேற்றம் செய்யவேண்டும். இப்பணிக்கென 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தின் தன்னார்வலர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு பணிபுரிய ஒரு தன்னார்வலருக்கு ஒரு நாளிற்கு ரூ. 500 வீதம் பள்ளி மானியத்திலிருந்து வழங்கவும் அவ்வாறு ஈடுபடும் தன்னார்வலர் ஒரு நாளில் குறைந்தது 500 புத்தகங்களையாவது சுத்தப்படுத்தி, வகுப்பு வாரியாக அடுக்கி, செயலியில் பதிவேற்றம் செய்கிறாரா என்பதையும் உறுதி செய்யவேண்டும். பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கைக்கேற்ப தன்னார்வலர்களைப் அப்புறப்படுத்த வேண்டும். இதனால் அனைத்துப் பள்ளி நூலகங்களும் மாணவர்களின் புத்தகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு அவை சுழற்சி முறையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் நிலை ஏற்படும்.

பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்த முடியாத நிலையிலிருக்கும் புத்தகங்களையும் செயலியில் பதிவேற்றியபின் பள்ளி நூலகத்திலிருந்து முழுமையான பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றப்படுவதோடு அனைத்துப் எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களும் இப்பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு உரிய அறிவுரைகளை வழங்கவும் அனைத்துப் பள்ளி நூலகங்களும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

-->