பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று நடைபெற்றது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் - தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi net

Breaking

Thursday 29 September 2022

பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று நடைபெற்றது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் - தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Department-of-School-Education-Review-meeting-for-all-Primary-Education-Officers-and-District-Education-Officers-held-on-16.09.2022-and-17.09.2022-Subject-matter-discussed-in-the-meeting---Appropriate-action-to-be-taken---Proceedings-of-Tamil-Nadu-Commissioner-of-School-Education


பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று நடைபெற்றது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் - தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Department of School Education Review meeting for all Primary Education Officers and District Education Officers held on 16.09.2022 and 17.09.2022 Subject matter discussed in the meeting - Appropriate action to be taken - Proceedings of Tamil Nadu Commissioner of School Education 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை -600006 
ந.க. எண். 043443/பிடி1/இ2/ 2022, நாள்:27.09.2022. 

பொருள்:

பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று நடைபெற்றது கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் - தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து 

பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், 
ந.க.எண்.043443/பிடி1/இ2/2022, நாள்.14.09.2022. 

பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று சென்னை-85, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. 

இணைப்பு: விவாதிக்கப்பட்ட விவரங்கள் 
பள்ளிக் கல்வி ஆணையருக்காக 

பெறுநர்: 
1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். 

நகல்: 

1. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தகவலுக்காக 
தலைமைச் செயலகம், சென்னை -9 (அனுப்பலாகிறது 
2. அரசு முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை தகவலுக்காக 
தலைமைச் செயலகம், சென்னை -9 
அனுப்பலாகிறது 
3. மாநில திட்ட இயக்குநர், சமக்ர சிக்ஷா , சென்னை -6 
4. சிறப்பு பணி அலுவலர், இல்லம் தேடிக் கல்வி, சென்னை -6. 
5. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 
சென்னை -6 
6. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை -6 
7. இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 
8. இயக்குநர், மெட்ரிக் பள்ளி இயக்ககம், சென்னை -6 
9. இயக்குநர், பள்ளிச்சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், 
சென்னை -6. 
10. நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை -6. 
11. பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர்கள், சென்னை -6. 12. பள்ளிக் கல்வி ஆணையரக நிருவாக அலுவலர், சென்னை -6 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருட்கள் 

இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022 
மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித் துறை செயலர் அவர்களின் தலைமையில் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் முன்னிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். 

1. பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் : 
- பள்ளி பார்வையின் போது ஆய்வு செய்ததில் பல பள்ளிகளில் மாணவர்கள் அடிப்படை வாசிப்பு மற்றும் எழுதும் திறன் அற்றவர்களாக இருப்பதைக் காண முடிந்தது. எனவே, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்குப் புரிந்துகொள்ளும் அளவில் உள்ளதா என்பதனை உறுதிப்படுத்திட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் பார்வையிடும் பள்ளிகளின் எண்ணிக்கை விவரத்தினைப் பள்ளி பார்வை செயலியில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அரசு/அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாதந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

- அரசுப் பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களே பெறுகிறார்கள். எனவே மாணவர்களுக்குச் சரியான பயிற்சியினை வழங்கிக் குறைந்தபட்சம் 50 முதல் 60" சராசரியாக மதிப்பெண்கள் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவ/மாணவிகளுக்கு உரிய செய்முறைத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்குதல் வேண்டும். வகுப்பறையில் பயன்படுத்திய பாடப்பொருளைத் தவிர்த்து மற்றவற்றை வீட்டுப்பாடங்களாக அளித்தல் வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்களும், முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களுடைய மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளிகளை ஆய்வு செய்தாரா என்பதையும் மற்றும் தலைமையாசிரியர்கள் அவருக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பில் சென்று பாடம் நடத்துகிறாரா என்றும் கண்காணித்தல் வேண்டும். கற்றல் அடைவு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு கற்றல் அடைவினை அதிகப்படுத்த வேண்டும். - ஒவ்வொரு மாணாக்கர்களிடம் உள்ள தனிப்பட்ட கற்றல் திறன்களை பரிசோதிக்க வேண்டும். 

தொடக்கக் கல்வி அளவில் படிக்கும் மாணவர்களுக்கு வரைபடங்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்து அவர்களை அரும்பு நிலையில் இருந்து மொட்டு நிலைக்கு உயர தயார்படுத்தவும். தமிழ்நாடு தேசிய அளவு அடைவு தேர்வில் பின்தங்கிய நிலையில் உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வியின் தரத்தை உயர்த்தி அவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கவேண்டும். அதற்கு அனைத்து மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும், குறைந்த மதிப்பெண் பெற்ற பள்ளிகளை ஆய்வு செய்து அப்பள்ளியில் இருக்கும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக ஆய்வு செய்து கற்றல் கற்பித்தல் பணிகளை மேம்படுத்திட ஆவன செய்ய வேண்டும். 

2. தொடக்ககல்வி இயக்குநர்: 
- அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் அரசாணை 151-இன் படி தங்களுக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ள பணிகளை நன்றாகப் புரிந்துக்கொண்டு அதனைப் பின்பற்றிச் சிறப்பாகப் பணியாற்றவேண்டும். 

உருது பள்ளிகளுக்காகப் புதிதாக 6 வட்டாரக் கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. - சுமார் 50 பள்ளிகளுக்கு (அரசு & அரசு உதவிபெறும்) ஒரு வட்டாரக் கல்வி  அலுவலர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
3. தனியார் பள்ளிகள் இயக்குநர்: 
- RTE attendance app-ல் மாணாக்கர்கள் வருகைப்பதிவு முறையாக  மேற்கொள்ளப்பட வேண்டும். - துவக்க அனுமதி ஆணை பெறப்படாத ( without opening permission ) மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்தல் வேண்டும். மெட்ரிக் பள்ளிகள் சார்பான நிலுவையில் உள்ள கோப்புகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் சார்பான கோப்புகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுச் சரிபார்த்து முறையாக சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (தனியார் பள்ளிகள்) ஒப்படைக்க வேண்டும். 2022 2023 ஆம் கல்வியாண்டில் RTE மாணாக்கர்கள் சேர்க்கை குறித்த பதிவுகள் EMIS portal - ல் முறையாகப் பதிவுகள் மேற்கொள்வதையும், பதிவுகள் மேற்கொள்ளாத RTE மாணாக்கர்களுக்கு Claim கோர முடியாது என்பதையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிப் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகாரம் புதுப்பித்து ஆணை அளிக்க வேண்டும். - 14417 கல்வித் தகவல் மையம் மூலமாகப் பெறப்பட்ட புகார் மனுக்கள் அதிக 
அளவில் பதில் அளிக்கப்படாத நிலையில் உள்ளன. இது சார்ந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். Right to Education Act (RTE ) Reimbursement ( 2021 - 2022 ) -க்கான கருத்துருக்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. - இந்தக் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு அனைத்து தனியார் பள்ளிகளும், கருத்துருக்களை, தனியார் பள்ளிகள் 

கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்பி, கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். - ஒவ்வொரு பள்ளிக்கும் உண்டான கல்விக் கட்டண நிர்ணயத் தொகையை ( Fee fixation amount) முதன்மைக் கல்வி அலுவலர்கள் CEO login - ல் பதிவு செய்து, அவற்றைச் சரிபார்த்து Approval வழங்க வேண்டும். Right to Education Act (RTE) attendance App - 60 91000GGJŮ பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் வருகையை 100 விழுக்காடு பதிவு செய்தல் முக்கியமானதாகும். மாவணர்களின் வருகைப் பதிவேட்டில் வருகையைப் பதிவு செய்வது கட்டாயமான ( Mandatory ) ஒன்றாகும். RTE சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சார்ந்து குழு உறுப்பினர்கள் பார்வையிட வேண்டும். குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் குறித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களாக ஒரு தலைமையாசிரியர், ஒரு வட்டார வள மைய ஆசிரியர், ஒரு கண்காணிப்பாளர் / உதவியாளர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். - EMIS மூலம் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ( Block) வழங்கப்படும் 

இரண்டு login ID, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு 1-ம், மெட்ரிகுலேசன் பள்ளிக்கு 1-ம் என கொடுக்கப்படும். - குழு பார்வையிடும் பொழுது, நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகை புரியாத மாணாக்கர்களின் பெயர் மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு சென்றிருந்த மாணாக்கர்களின் பெயர் Tag செய்திருப்பின், அதற்கான வருகைப் பதிவேட்டை (Physical verification ) சரிபார்த்து , அவர்களின்  பெயரைப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும். - மேற்கண்ட குழு வங்கிக் கணக்கினைச் சரிபார்த்து, IFSC Code , பயனீட்டாளர் பெயர் மற்றும் கணக்கு எண் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். - மேற்காண் பணிகளை முடித்த பிறகு வகுப்பு வாரியாக மாணாக்கர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு ஈடுசெய்யப்படும் தொகை ஆகிய அனைத்து விவரங்கள் அடங்கிய கணக்கீட்டுத் தாளை ( Download report ) பதிவிறக்கம் செய்து, குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சார்ந்த  முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். - 2022 2023 ஆம் கல்வியாண்டிற்கான RTE திட்டத்தின்கீழ் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்கள் எவரேனும் விடுப்பட்டிருந்தால் முந்தைய  வருகைப் பதிவேட்டினைச் சரிபார்த்து Tag செய்யும் பணியையும் குழு தளத்திலேயே மேற்கொள்ள வேண்டும். - சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் Login -ல் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கான கணக்கீட்டுத் தாளை சரிபார்த்து, கையெழுத்திட்டு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்திற்கு 30.09.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

4. மாநில திட்ட இயக்குநர்: 
SCHOOL MANAGEMENT COMMITTEE (SMC) - பள்ளி மேலாண்மைக் குழுவில் இது வரை 3 செயல்முறைக் கடிதங்களும்  அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1770 பள்ளிகளில், 716 பள்ளிகளின் விவரங்கள் மட்டும் வருகைப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பள்ளிகளின் பதிவுகளும் முழுமையாகப் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணியினை BRTS, பயிற்சி அலுவலர்கள், மற்றும் தலைமையாசிரியர்களைக் கொண்டு விரைந்து முடித்தல் வேண்டும்.

 - தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1330 பள்ளிகளிலும் SMC-ல் வருகைப்பதிவேடு பற்றிய விவரங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் 
செய்து முடித்திருக்கிறார்கள். இவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். SMC கூட்டம் நடைபெறும்போது அனைத்து உறுப்பினர்களின் வருகையினை SMC வருகைப்பதிவேட்டில் பதிவேற்றம் செய்து முடித்திருக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேடு தனியாகப் போடவேண்டும். SMC இணையதளப் பதிவுகள் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. 
அதனால் அன்றாடம் வருகையினைப் பதிவேற்றம் செய்தல் வேண்டும். - பள்ளி மேலாண்மைக் குழுவில் தேதி, நேரம் SMC-ல் குழு உறுப்பினர் போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள், என்னென்ன வகுப்புகள் எடுக்கிறார்கள், சரியாக (சரியான நேரத்தில்) வருகை புரிகிறார்களா என்ற விவரத்தையும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுக்கும் பாடம் மற்றும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்குப் பாடம் நடத்துகிறார்களா என்பதையும் பார்க்கவேண்டும். 

- அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பொருத்தவரை எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை, பயன்படுத்ததக்க கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பான மின்சாரம் குறித்தும் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விவரங்களைச் சேகரித்துப் பதிவேற்றம் செய்யவேண்டும். - மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாதம் ஒரு கூட்டம் நடத்தப்படும்போது  அடுத்தமாதம் நடைபெறும் கூட்டத்தின் -விவாதப்பொருளை அக்கூட்டத்திலேயே தீர்மானித்தல் வேண்டும். 

EMIS Training 

- ஒரு சில மாவட்டப் பள்ளிகளில் Health செயலியில் மாணவர்கள் உடல் நலன் 
சார்ந்த விவரங்களை மிகவும் சிறப்பாகப் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். இம்மாதிரியான பள்ளிகளைத் தேர்வு செய்து பிற பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடத்தி, அவர்களுக்கு மொபைல் ஆப்பில் செய்முறைகள் நன்றாக புரியக்கூடிய அளவில் செய்து காண்பிக்கவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் 16 இலக்க EMIS ID இருக்கும். இதனை மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்க முடியாது. அதனால் தற்போது 10 இலக்க எண்ணாக மட்டும் தொலைபேசி எண்ணைப் போன்று நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது. 

5. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்: 

- குறுவள மையம் (CRC Attendance) கூட்டத்தில் ஜுலை மாதத்தை விட 
ஆகஸ்ட் 2022 மாதத்தில் ஆசிரியர்களின் வருகை விழுக்காடு குறைவாக இருப்பது குறித்து 75%க்கும் குறைவாக உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அதற்குரிய காரணங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் குறுவள மைய பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்வதில் பிரச்சினை உள்ள இடத்தைக் கண்டறிந்து சரிசெய்ய கள ஆய்வு அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டது. குறுவள மையக் கூட்டத்தில் கருத்தாளர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்களின் பணி முக்கியமானதாகும். 

அக்டோபர் 2022 மாதத்தில் நடைபெற உள்ள குறுவள மையப் பயிற்சி மேலும் சிறப்பாக நடைபெறுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி  செய்யவேண்டும். ஆசிரியர்களின் வருகை குறைவாக உள்ளதைச் சரிசெய்து 90 விழுக்காட்டுக்கு மேல் வருகையை உறுதிப்படுத்தி முதன்மைக் கல்வி 
அலுவலர்கள் இப்பயிற்சியைப் பார்வையிட வேண்டும். 

- குறுவள மையப் பயிற்சி சிறப்பாக நடைபெற LCD projector மற்றும்  ஆசிரியர்கள் அமர்வதற்கேற்ப காற்றோட்ட வசதியுடன் அறைகள் நன்றாக உள்ளதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். - பயிற்சி நேரத்தில் பிற பொருள் சார்ந்து எவ்விதமான கூட்டத்தையும் நடத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதிக்கக்கூடாது. பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் காலந்தவறாமையைக் கடைபிடிக்கவேண்டும். - ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வளரறி மதிப்பீட்டிற்கான (Formative 
Assessment) செயல்பாடுகளைச் செய்து முடித்தல் வேண்டும். அடிப்படைக் கற்றல் திறனறிதல் மதிப்பீடு (Baseline assessment survey) மாணவர்களின் கற்றல் நிலையை அறிய உதவுகிறது. - வட்டார வாரியாக மற்றும் பள்ளி வாரியாக உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வினை எட்டவேண்டும். இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி செப்டம்பர் 19, 20 மற்றும் 21 ஆகிய நாள்களில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. -

 மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி செப்டம்பர் 27, 28 மற்றும் 29 
ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒன்றிணைந்து பயிற்சி நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்து இப்பயிற்சியினை செம்மையாக நடத்தி முடித்திடல் வேண்டும். - இப்பயிற்சிக்கு அடிப்படைத் தேவையான LCD projector இருப்பதை  முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்தல் வேண்டும். - எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார அளவில் நடைபெறும்போது வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்கேற்பாளர்களாக பயிற்சியில் கலந்து கொள்வதற்கு உரிய அறிவுரையை முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். - எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் பெரும்பாலான மாணவர்கள் அரும்பு நிலையிலேயே உள்ளனர். அவர்கள் மொட்டு நிலைக்கு உயர தயார்படுத்த வேண்டும். 

- எண்ணும், எழுத்தும் திட்டம் பாடக்குறிப்புப் படிவத்தைத் தவிர வேறு எந்தப் பதிவேடுகளோ மற்றும் படிவங்களோ பராமரிக்க வலியுறுத்தவில்லை என்பதைப் பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும். எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்பான ஆங்கிலம் கற்பித்தல் வகுப்பறை சார்ந்த காணொலி மூலம் வகுப்பறையில் மாணவர்கள் குழுவாக இணைந்து, உற்சாகத்துடன் படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குதல் குறித்து விளக்கப்பட்டது. Formative assessment (வளரறி மதிப்பீடு) மாணவர்களின் கற்றல் நிலையை அறிய உதவுகிறது. எனவே இச்செயல்பாடு நடைபெறுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். - 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு முதல் பருவத் தேர்வினை நடத்துவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அனைத்துப் பாடங்களுக்கும் வினாத்தாள் அடங்கிய குறுந்தகடு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை மந்தணத் தன்மையுடன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இந்நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி நடத்துமாறு அறிவுறுத்த வேண்டும். 

6. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் 
- புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்பது 15 வயதிற்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத, பள்ளிக்கூடத்திற்கே செல்லாத வயது வந்தோர் அனைவரையும் அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றுகின்ற வயது வந்தோர்க்கான திட்டம் ஆகும். - முதல்வரின் முகவரியில் உள்ள நிலுவை மனுக்களை மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும். 

7. இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி): 

- 01.10.2022 தேதி முதல் மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை), மாவட்டக் 
கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) என்று தனியாகச் செயல்படவுள்ளன. 

- மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு உரிய விதிமுறைகளின் 
அடிப்படையில் வெளிப்படையாக நடைபெற்றுள்ளது. ஆணைகள் விரைவில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்குப் பிரித்து வழங்கவேண்டிய கோப்புகளைச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் குழு அமைத்து, கோப்புகளை சரி பார்த்து சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கு வழங்குதல் வேண்டும். - நிலுவையில் உள்ள CM Cell Petition களை விரைந்து முடிக்க வேண்டும். 

அதுபோல் முதல்வரின் முகவரியில் உள்ள நிலுவை மனுக்களையும் விரைந்து முடிக்க வேண்டும். - நீதிமன்ற வழக்குகள் சார்ந்த கோப்புகளின் மீது காலதாமதம் இன்றித் தொடர்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

ஒழுங்கு நடவடிக்கை சார்ந்து நிலுவையில் உள்ள கோப்புக்களை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்குப் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலரை நியமனம் செய்து விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். சமீபத்தில் சாரண சாரணியர் அமைப்பினுடைய மாநில அளவிலான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியின்றி மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அவர்கள் முதன்மை பேராணையராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அடுத்த மாதத்திற்கான ஆய்வுக் கூட்டத்தில் சாரண சாணியர் அமைப்பினுடைய செயல்பாடுகள் சார்ந்த விவரங்கள் பள்ளிக் கல்வி ஆணையரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. - Unit Registration Payment Details Pending அதிகம் உள்ள திருவள்ளூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வேலூர், அரியலூர் கடலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், நாமக்கல், தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்துதல் வேண்டும். POCSO Related Complaints பெறப்படும்போது எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்துத் தலைமையாசிரியர்களின் கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகள் வழங்குதல் வேண்டும். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தினை மேம்படுத்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் சிறப்பான கற்றல் கற்பித்தல் திட்டங்களை வகுத்து, அதனைப் பள்ளிகளில் நடைமுறைபடுத்துவதை உறுதி செய்திட ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். 

8. இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) : 

- பள்ளிப் பார்வைசெயலியினைத் தலைமைச் செயலர், முதலமைச்சரின் தனிச்செயலர், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் 
ஆகியோர் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அனைத்து விதமான அலுவலர்களும் பள்ளிப்பார்வை செயலியினைப் பயன்படுத்தி வருகிறார்கள். 7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளைப் பார்வையிட்டு பள்ளிப்பார்வை செயலியில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். 
31.08.2022 அன்று EMIS இல் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்/ பணியாளர் நிர்ணயம் (Staff Fixation) செய்யப்படவேண்டும். ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்களின் வருகை சார்ந்த பதிவுகளை இணைய வழியாக (Online) மேற்கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் தற்போது வரை பதிவேடுகளின் மூலம் வருகைப்பதிவு பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி இணைய வழி வருகை பதிவினை உறுதி செய்தல் வேண்டும். - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் எதிர்வாத உரை தயார் செய்து நீதிமன்றத்தில் உரிய காலத்திற்குள் தாக்கல் செய்தல் வேண்டும். - PG Teacher காலிப்பணியிட விவரங்களை அக்டோபர் 15-க்குள் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்கள் EMIS-ல் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். காலியாக உள்ள பணியிடம் IFHRMS-ல் உள்ளதா என்பதனை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும். - EMIS Portal Register யை முறையாகப் பராமரித்தல் வேண்டும். 
9. இணை இயக்குநர் (தொழிற்கல்வி): 

- 2022-23 கல்வியாண்டில் மிதிவண்டிகள் வழங்கப்படாமல் உள்ள மாணவர்கள் 
இருப்பின் அம்மாணவர்களுக்கு மிதிவண்டிகளை விரைந்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும். 7 2022-23 ஆம் கல்வியாண்டில் இரண்டாம் பருவ சீருடைகள் மாணவ/மாணவியருக்கு உரிய நேரத்தில் வழங்கும் வகையில் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

10. இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) 

- National Means cum Merit Scholarship - 

இந்த ஆண்டு 5900 மாணவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட அளவில் முடிக்கப்படாமல் உள்ளது. - செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் NMMSentry நிலுவையில் உள்ள மாவட்டங்கள் 
விரைந்து முடித்தல் வேண்டும். - NSS DLO மற்றும் Programme Officers பணிக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களையே பயன்படுத்த வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களை இப்பணிக்காக நியமிக்கக் கூடாது. DLO'S பள்ளிகளில் உள்ள NSS Unit-களின் செயல்பாடுகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும். - NSS Special Camp அக்டோபர் மாதம் 7 நாட்கள் நடத்தப்படவேண்டும். - தனியார் பள்ளிகளில் உள்ள NSS Units செயல்படுகிறதா என்பதனைக் 
கண்காணித்தல் வேண்டும். - Breadwinning Scheme சார்ந்து கருத்துருக்கள் அனுப்பும்போது தகுதியான  மாணவர்களின் விவரங்களைச் சரிபார்த்து அனுப்ப வேண்டும். - 11 மாவட்டங்களில் ECO Coordinator பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்குப் பணி மூப்பின் அடிப்படையில் முதுகலை ஆசிரியரைத் தேர்வு செய்து அதன் விவரத்தினைச் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். - மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் அனைத்து வகையான   போட்டிகளிலும் அரசுப் பள்ளி மாணவ/மாணவியர் பங்கேற்பதை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

11. இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) 

- அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் மான்யம் பெறும் வகுப்புகளுக்கு அரசால் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மான்யம் பெறும் வகுப்புகளில் 01.08.2022- நிலவரப்படி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர் பணியிடங்கள் அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர் நிலையில் நிர்ணயம் செய்து 15.10.2022 க்குள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். 

பணியாளர் நிர்ணய ஆணையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை கண்டறிந்து முதலில் தேவையுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பணிநிரவல் செய்யப்படவேண்டும். - மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பின் அதே வருவாய் மாவட்டத்திற்குள் தேவையுள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுபணியில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். மேற்காண் பொருள் சார்ந்து விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

12.பள்ளிக் கல்வி ஆணையர் 

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் (Special Class) ஒதுக்கி பள்ளிகளில் பாடம் நடத்தப்படவேண்டும். மாணவர்கள் எந்தப் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள், அதற்கான காரணம் குறித்து சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கூட்டம் நடத்தி மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அப்பள்ளிகளுக்கான Action Plan குறித்த விவரத்தினை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)-க்கு அனுப்பி வைக்க வேண்டும். - அடுத்த மாதாந்திர கூட்டத்தில் ஏதேனும் 3 மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி) மற்றும் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் அவர்களின் முன்னிலையில் தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்களைப் பூர்த்தி செய்து தங்களின் Action Plan 
என்னவென்று விவரித்தல் வேண்டும். 

A. Students in Common Pool Classwise: 
- EMIS-ல் திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 
Common Pool-யில் உள்ள மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் Common Pool-யில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள 
வேண்டும். 

B. CWSN Transition from class 8 to 9 as on 07.09.2022: 
2021-2022 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 2022-2023 ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு சேர்க்கை எண்ணிக்கை சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி இடைநிற்றலைக் குறைத்து மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த உரிய 
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

C. Transition Rate from Primary to Upper Primary (Class 5 to Class 6)as on 
08.09.2022: - EMIS-ல் Transition 5 to 6: 2021-22 ஆம் கல்வியாண்டில் 5 ஆம் வகுப்பில் 
தேர்ச்சி பெற்று 2022-23 ஆம் கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை தென்காசி, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் குறைவாக உள்ளது. எனவே சார்ந்த முதன்மைக் கல்வி 
அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

D. Transition Rate from Upper Primary to Secondary (Class 8 to Class 9)as on 
08.09.2022: - EMIS-ல் Transition 8 to 9: 2021-22 ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பில் 
தேர்ச்சி பெற்று 2022-23 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை புதுக்கோட்டை, தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குறைவாக உள்ளது. எனவே சார்ந்த  முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை 
மேற்கொள்ள வேண்டும். 

E. Transition Rate from Seconday to Higher Secondary (Class 10 to Class 
11) as on 10.08.2022: 

- EMIS-ல் Transition 10 to 11: 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் 
தேர்ச்சி பெற்று 2022-23 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல், வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் குறைவாக உள்ளது. எனவே சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

F. Government and Private School Enrolment Change between two years as on 

08.09.2022: - EMIS-ல் சென்னை , கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 2021-22 கல்வியாண்டைவிட 2022-23 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து 
அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

G. Increase in Enrolment between 2021-22 and 2022-23 (Classi) as on 
08.09.2022: 

2021-22 கல்வியாண்டை விட 2022-23ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை நீலகிரி, சென்னை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் குறைவாக உள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி மாணவர்கள் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

H. % Schools marking Teacher attendance Report from 22.08.2022 to 26.08.2022: 

- ஆசிரியரின் தினசரி வருகை குறித்த பதிவுகள் திருவாரூர், நாகப்பட்டினம் 
மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் EMIS-யில் குறைவாக Mark செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி வருகைப்ள பதிவு விவரங்களை EMIS-யில் பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

I. % Section Marking Student Attendance from 22.08.2022 to 26.08.2022: 

- 22.08.2022 முதல் 26.08.2022 நிலவரப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறித்த பதிவுகள் திருவாரூர், தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் குறைவாக Mark செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

J. Students Without Aadhar as on 09.09.2022. 

- EMIS யில் ஆதார் எண் பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் எண்ணிக்கை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 
அதிகமாக உள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

K. Schools without Enrolment as on 08.09.2022: 

- 2022-23 ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர், பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி அப்பள்ளிகளில் மாணவர்  சேர்க்கை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

L. Schools without Teacher as on 21.03.2022: 

- ஆசிரியர்களின் விவரங்கள் EMIS-ல் ஏற்றப்படாத பள்ளிகளின் எண்ணிக்கை திருவள்ளூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் Schools without Teacher அதிகமான எண்ணிக்கையில் உள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி முழுவதுமாக ஆசிரியர்கள் விவரங்களைப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

M. UDIDs & Acfor CWSN as on 02.09.2022 

- Unique Disability ID Card இல்லாத மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்தாலோசித்து மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க உரிய ஏற்பாடுகளை செய்தல் வேண்டும். 

N. PET to School Mapping Status as onn 09.09.2022 

- மாணவர்களுக்கான உடல் திறன் தேர்வுகள் நடத்தி அதன் விவரத்தினை EMIS ல் பதிவு செய்ததில் சென்னை , வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் குறைவாக உள்ளது. எனவே, சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

O. Post Sanctioned Details Entry Report as on 10.08.2022 

- பள்ளிகளுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 
விவரத்தினை EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டதில் சென்னை , திருச்சிராப்பள்ளி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் குறைவாக உள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி முழுவதுமாக ஆசிரியர்கள் விவரங்களை பூர்த்தி செய்ய உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

P. RTE Admission Status as on 09.09.2022: 

- RTE மூலமான மாணவர்களின் சேர்க்கையினை EMIS-யில் குறைவான 
எண்ணிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்ட மாவட்டங்கள் சென்னை, திருவாரூர் மற்றும் திருவள்ளூர் எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி 
அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள 
வேண்டும். 

Q. Health Screening % as on 09.09.2022 

நிலவரப்படி 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான HEALTH SCREENING STATUS -யில் EMIS-ல் குறைவாக பதிவேற்றம் செய்யப்பட்ட மாவட்டங்கள் 
மகது கரூர், தஞ்சாவூர் மற்றும் விருதுநகர். எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 

R. Schools Having Classes More Than Their Category Limit as on 08.09.2022: 

- பள்ளியின் வகையின் படி உள்ள வகுப்புகளின் வரம்பை விட கூடுதலான வகுப்புகள் நடைபெறும் பள்ளிகள் அதிக அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பள்ளிகளும், சென்னை , விழுப்புரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளும் உள்ளன. அப்பள்ளிகள் குறித் தத விவரங்களைச் சரிபார்த்து, தரம் உயர்த்தப்பட்டதா அல்லது சுயநிதி வகுப்புகளா என்பதைக் கண்டறிய வேண்டும். 

S. Leave Applications Received through the APP from 26.08.2022: 

- அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க பள்ளிகள் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க TNSED-Schools செயலி உருவாகக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அச்செயலி முழுமையாக பயன்படுத்தி விடுப்பு பெறாத மாவட்டங்கள் தேனி, அரியலூர் மற்றும் இராமநாதபுரம். எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

T. Number of Un recognized Private Schools as on 11.07.2022: 

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சிவகங்கை, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- பள்ளி பார்வை செயலியில் பள்ளிகளில் பார்வையிட்ட விவரம் மற்றும் 
ஆண்டாய்வு செய்த விவரங்கள் திருப்பூர், திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment

-->