What does it mean to make allowances?
What is an example of allowance?
What does allowance mean in economics?
What is field allowance?
📚அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்த மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
📚மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும்.
மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக இந்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.
📚7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: இந்த நவராத்திரியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்து விட்டது. அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 30 முதல், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் புதிய அகவிலைப்படி சேர்க்கப்படும். மேலும் செப்டம்பர் 28 ஆம் தேதி மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிகின்றன.
📚அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 30 முதல் புதிய அகவிலைப்படியைச் சேர்த்து ஊதியம் கிடைக்கும். செப்டம்பர் 28 ஆம் தேதி, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கும். அதன் அரசாங்க அறிவிப்பு குறிப்பாணையும் அன்று மாலை வெளியிடப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த அறிவிப்பு வெளியாகும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
📚அகவிலைப்படி 38% ஆக உயரும்
📚இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும். இந்த உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும். மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக இந்த அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய ஊழியர்களுக்கு இரண்டு மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இந்த நிலுவைத்தொகை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகையாக இருக்கும்.
No comments:
Post a Comment