செய்தி வெளியீடு எண்: 1564
செய்தி வெளியீடு
நாள்: 10.09.2022
நாமக்கல் மாவட்டத்தில் நீச்சல் பழகச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கட்டநாச்சம்பட்டி கிராமம், அத்திப்பழகானூரில் வசித்துவரும் திரு. கணேசன் - திருமதி வெண்ணிலா தம்பதியினரின் மகள் க. ஜனனி (வயது 14) மற்றும் திரு கண்ணன் திருமதி தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் க ரச்சனா ஸ்ரீ (வயது 15) ஆகிய 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இன்று (10.9.2022) பள்ளி விடுமுறை என்பதால் அருகிலுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
***

No comments:
Post a Comment