தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 689/ஒபக/2022 நாள்: 26.09.2022
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - தஞ்சாவூர் மாவட்டம் 2022-23ஆம் கல்வியாண்டு - பள்ளி மேலாண்மைக்குழு - அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம்- வழிகாட்டுதல் வழங்குதல் - சார்பு.
சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:2223/இ7/ஒபக/படமே.கு/2022 நாள்:22.09.2022.
பார்வை :
பார்வையில் காணும் சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு ஏப்ரல் முதல் ஜீலை மாதம் வரை நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் புதிய உறுப்பினர்களைக் கொண்டு மாதந்தோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் மட்டும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 30.08.2022 (வெள்ளிக்கிழமை)
அன்று பிற்பகல் 4,30 மணி முதல் 6.00 மணி வரை நடத்த அறிவுறுத்தப்படுகிறது. இம்மாதம் அனைத்து அரசு தொடக்கநிலை முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை தேர்வுகள் நடைபெற உள்ளதால், மேற்குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுகள் முடிவடைந்தவுடன் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை நடத்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கிராம சபைகூட்டம்
அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் பஞ்சாயத்துடன் தொடர்புடைய பள்ளிகளில் மட்டும் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம கல்வி குழு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு ஆலோசித்து பள்ளி வளர்ச்சி தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள்களின் தீர்மானங்களை அடுத்து வரும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கலந்தாலோசனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் வருகைப்பதிவு
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் வருகைப்பதிவு சென்ற மாதக் கூட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் செயலியில் பதிவு செய்யப்படவில்லை என அறிக்கை பெறப்பட்டதை தொடர்ந்து இம்மாத கூட்டத்தின் வருகைப்பதிவினை செயலியில் தவறாது பதிவு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் வருகைப்பதிவினை தலைவர் மட்டுமே பெற்றோர் செயலியில் (TNSED Parent App) கூட்டம் நடைபெறும்போது பதிவு செய்தல் வேண்டும். தலைவர் தங்களது கைபேசி அல்லது பிற உறுப்பினர்களின் கைபேசி மூலமாக வருகைப்பதிவினை பதிவு செய்யலாம். அதற்கான வழிகாட்டுதல் காணொலி வட்டார வளமையங்களுக்கு அனுப்பட்டுள்ளது.
பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கவும் அதை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் இதற்கெனப் பள்ளி மேலாண்மைக்குழு தொகுதியைப் (SMC Module) பெற்றோர் செயலியில் (TNSED Parent App) ஒரு பகுதியாகப் பள்ளிக் கல்வித் துறை பயிற்சியின் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மாத பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் திட்டமிடுதல் சார்ந்து செயலியில் பதிவு செய்யப்படவில்லை என அறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இச்செயலியின் வாயிலாக திட்டமிடுதல் மேற்கொள்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும். பள்ளியின் முழுமையான மேம்பாடு தொடர்பானத் தகவல்களைச் சேகரிக்கவும், சரிபார்க்கவும் மற்றும் திட்டமிடவும் இந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் நான்கு முக்கிய கூறுகளான சேர்க்கை மற்றும் தக்கவைத்தல், கற்றல், கட்டமைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை உதவும்.இந்தச் செயலியின் மூலம் தயாரிக்கப்படும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
பள்ளி மேலாண்மை குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் இந்த செயலி மூலம் பெற்றோர்களுக்குப் பகிரப்படும்.
திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்
மதிப்பீடு அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்களுடன் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவர மதிப்பீட்டு அறிககையினை பகிர்ந்து, மாணவர்களின் கற்றல் அடைவு சார்ந்து கலந்தாலோசனை செய்ய திட்டமிடுதல் வேண்டும்.
பள்ளி பாதுகாப்பு சார்ந்த உட்கட்டமைப்பு - சுற்றுச்சுவர். முதலுதவி வசதி, தீயணைப்பு கருவி போன்ற வசதிகளை உறுதி செய்தல் வேண்டும்.
மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பள்ளியில் மாணவர்களுக்கான பொது சுகாதார மருத்துவ சோதனை நடைபெறுவதையும், அதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் வாயிலாக மாணவர்களுக்கான உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதையும் தலைமையாசிரியர் உறுப்பினர்களுக்கு பெற்றோர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து இரும்புச்சத்து மாத்திரைகள், குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் நாப்கின்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை உறுப்பினர்கள் உறுதி செய்தல் வேண்டும்.
இடைநின்ற பள்ளி செல்லா குழந்தைகள் - பள்ளி செல்லாத/இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு விவரத்தினை குடியிருப்பு வாரியாகத் தொகுத்து அவர்களைப் பள்ளிகளில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்து கலந்தாலோசனை செய்யப்படுதல் வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கடந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அவர்கள் சார்ந்த மையத்தில் பயிலும் மாணவர்களின் கற்றல் குறித்த ஆலோசனைகள் சார்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை கலந்தாலோசனை செய்யப்படுதல் வேண்டும். தொடர் நடவடிக்கைகள் சார்ந்த திட்டமிடல் மேற்கொள்ளப்படுதலை தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி - மாணவர்களின் உயர்கல்வி - மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டி குறித்து மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த மாத (26.08.2022) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் கலந்தாலோசனை செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் உயர்கல்வியில் தொடர் இயலாத மாணவர்களின் எண்ணிக்கை சார்ந்த தரவுகள் சேகரிக்கப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட வேண்டும். அதுசார்ந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வதை தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உறுதிசெய்தல் வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு முதன்மைக் கருத்தாளர்கள் பார்வையாளர்கள்: பங்கும் பொறுப்பும்
பள்ளி மேலாண்மைக் குழு முதன்மைக் கருத்தாளர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பார்வையாளர்கள் பள்ளிகளுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
1 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் தொடர்பாக பின்பற்றவேண்டிய அனைத்து வழிமுறைகளையும், கூட்ட நிகழ்வையும் பார்வையாளர் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
2. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட நாளன்று பிற்பகல் 230 மணியளவில் பார்வையாளர் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
3. பள்ளி மேலாண்மைக் குழு குறித்த ஊக்கமூட்டும் காணொலிகள் திரையிடப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
4. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் முழுவதும் நடந்து முடியும் வரை பார்வையாளர் பள்ளியில் இருத்தல் வேண்டும்.
5. தேவைப்படும் பட்சத்தில் கூட்டம் சார்ந்த நிகழ்வில் பார்வையாளர் உறுதுணையாக இருத்தல் வேண்டும். (வருகைப் பதிவு திட்டமிடல் செயலி சார்ந்த செயல்பாடுகளில்)
6 பார்வையாளருக்கென தரப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி (Google Form) செய்து, அதனை பள்ளி மேலாண் மைக் குழு கூட்ட நாளன்றே சமர்பித்தல் வேண்டும்.
காணொலிகள்
பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த சிறந்த செயல்பாடுகளுக்கான காணொலிகள் (Best Practices Videos), வருகைப் பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் சார்ந்த செயலியின் காணொலிகள் சார்ந்த இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1 Attendance https//bit.ly/SMCAppAttendance
2. Planning Partt https//bitly/SMCSDP1
3. Planning Part 2: https://bit.ly/SMCSDP2
4. Planning Part 3: https:/bit.ly/SMCSDP3
5. Playlist link: https//bit.ly/SMCSupportVideos
பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்காண் காணொலிகளை பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பகிர்வதை உறுதி செய்தல் வேண்டும்.
மேற்காண் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பான முறையில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்புடன் நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி திட்ட அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், விரிவுரையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒன்றியங்களில் 30.09.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தினை பார்வையிட்டு அறிக்கையினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment