'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி!
நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யும் பச்சைப்படுகொலை!
| 'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி! |
| 'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி! |
09-09-2022
‘நீட்’ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள்
80% தோல்வி; மாணவி தற்கொலைக்கு
அரசே பொறுப்பேற்க வேண்டும்!
தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை திருமுல்லைவாயலை
சேர்ந்த தங்கை லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து
பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். நீட் தேர்வை இரத்துச் செய்யாமல்
மாணவர்களின் உயிரோடு விளையாடும் இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு
அரசுகளின் துரோகச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
திருத்தணியைச் சேர்ந்த மற்றொரு தங்கை ஜெயசுதா நீட் தேர்வு
தோல்வியால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
நீட் தேர்வில் தோல்வியுற்றதற்காக உயிரைவிடும் எண்ணத்தைத்
எனதருமைத் தம்பி, தங்கைகள் கைவிட வேண்டும். போர்க்குணமும்,
போராட்ட உணர்வும் மரபணுவிலே நிரம்பப் பெற்றிருக்கிற
தமிழ்ப்பேரினத்தின் பிள்ளைகள் ஒருபோதும்
நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக்கூடாது
என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். போராடி
வாழ்க்கையை வென்று கனவிலே வெற்றிபெற
உள்ளவுருதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என
தம்பி, தங்கையர்களுக்கு அண்ணனாக இருந்து
அறிவுறுத்துகிறேன்.
நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின்
மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற
தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள்
No comments:
Post a Comment